அரிசி அடை Arisi Adai – Madras Samayal
கொழுப்பு சத்துக்களை கூட்டும் அரிசி அடை
தமிழ் மெட்ராஸ் சமையல் – Madras Samayal
தேவையான பொருள்கள்:
- பச்சரிசி
- உளுத்தம் பருப்பு
- துவரம் பருப்பு
- கடலைப் பருப்பு
- காய்ந்த மிளகாய்
- பச்சை மிளகாய்
- பெருங்காயம்
- துருவிய தேங்காய்
- உப்பு
திணை அடை செய்வது எப்படி ? Millet Dosa
அரிசி அடை செய்முறை:
- அரிசியையும், பருப்பையும் கல் இல்லாமல் களைந்து கொள்ள வேண்டும்.
- அரிசியையும், மிளகாய்களையும், பருப்புகளையும் ஒன்றாக வைத்து இரண்டு மணி நேரம் நீரில் ஊற வைக்கவும்.
- பிறகு மேற்கண்ட பதார்த்தங்களை மிக்சியில் போட்டு உடன் பெருங்காயம், உப்பு ஆகிய இவற்றையும் சேர்த்து அதிகம் தண்ணீர் விடாமல் சிறிது நறநறவென்று அரைத்துப் பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு தேங்காய்த் துருவலையும் சேர்த்து வேண்டும் என்றால் சிறிது தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்.
- பின்னர் தோசைக் கல்லை நன்கு துடைத்து, அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அடை மாவை ஊற்றிச் சிறிது கனமாக அடை வார்க்கவும்.
- பிறகு இரு பக்கமும் திருப்பிப் போட்டு எண்ணெய் ஊற்றி, சிவக்க எடுக்கவும்.
- சுவை பிரியர்கள் வெங்காயத்தை சிறிது, சிறிதாக நறுக்கியும் போடலாம். அதே போல கோஸைக் கூட பொடிப் பொடியாக சிலர் நறுக்கி சேர்ப்பார்கள். விரும்பினால் கீரையை கூட உடன் சேர்த்து அடை வார்க்கலாம். ஆனால் கீரையில் மண் இல்லாதபடி கழுவிட வேண்டும்.
கம்புப் பணியாரம் செய்வது எப்படி ? Kambu Paniyaram