Tamil Madras Samayal – சாம்பல் பூசணி கிச்சடி செய்வது எப்படி இங்கே தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள் :
பொருள்அளவு
- பூசணி கால் கிலோ
- எண்ணெய் தேவைக்கேற்ப
- சீரகம்அரை டீஸ்பூன்
- கடுகுஅரை டீஸ்பூன்
- உளுத்தம் பருப்பு1 டீஸ்பூன்
- கடலை பருப்பு 1 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் 3 கீறியது
- சாம்பார் பொடி 1 டேபிள் ஸ்பூன்
- தேங்காய் துருவல் கால் கப்
- கொத்தமல்லி 1 கைப்பிடி
- கறிவேப்பிலை 1 கொத்து
- உப்பு தேவைக்கேற்ப
சுவையான கொள்ளு ரசம் செய்வது எப்படி ? Kollu Rasam
செய்முறை :
சாம்பல் பூசணியின் கடினமான மேல் தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து சிவந்ததும், கீறிய பச்சை மிளகாய் போட்டு, கருவேப்பிலையும் சேர்த்து தாளிக்கவும்.
பிறகு நறுக்கிய பூசணியை சேர்க்கவும். சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சாம்பார் பொடி சேர்த்து நன்கு பிரட்டி விடவும்.
பின் தேங்காய்த்துருவல் சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சாம்பல் பூசணி கிச்சடி தயார்.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : சாதத்துடன் வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.