Home » Millet recipes in Tamil சிறுதானிய சமையல் » சிறு தானியங்களின் மருத்துவ நன்மைகள்-Tamil Receipes
சிறுதானிய சமையல்

சிறு தானியங்களின் மருத்துவ நன்மைகள்-Tamil Receipes

அரிசி மற்றும் கோதுமையை விட சிறுதானியங்களில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதாக விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது சிறுதானியங்களில் புரதம் நார்சத்து தயமின் மற்றும் ரிபோஃபிளேவின் ஆகிய வைட்டமின்கள் இரும்பு சத்து மெக்னீசியம் கால்சியம் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் அதிக அளவில் காணப்படுகின்றன மேலும் சிறுதானியங்களில் உள்ள பைட்டிக் அமிலம் எனப்படும் தாவர ஊட்டச்சத்து மனித உடலில் உள்ள கொழுப்பின் அளவை குறைப்பதால் புற்றுநோயினை வெகுவாக குறைக்கிறது.

உதாரணமாக 100 கிராம் சிறுதானியத்தில் அதிகபட்சமாக 12.5 கிராம் புரதசத்து உள்ளது ஆனால் அரிசியில் 7.9 கிராம் மட்டுமே உள்ளது. இதேபோன்று அரிசியுடன் ஒப்பிடும்போது சிறுதானியங்களில் நார்சத்து இரண்டு கிராம் முதல் 13.6 கிராம் உள்ளது இரும்புச்சத்து 1.7 மில்லிகிராம் முதல் 18.6 மி.கி. மற்றும் கால்சியம் 17 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் அதிகமாக உள்ளன.

உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு-Tamil Receipes

  • சிறுதானியங்கள் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் நுண் கிருமிகளின் வளர்ச்சியினை தடுக்கின்றன.
  • பெருங்குடல் செயல்பாட்டை சீராகின்றன
  • உடல் நலத்திற்கு ஏதுவான கிருமிகளின் வளர்ச்சியை தூண்டுகின்றன
  • உடல் சுறுசுறுப்பிற்கு காரணமான பாராட்டினேன் உற்பத்திக்கு உதவுகின்றன
  • சிறுதானியங்களில் அதிக அளவில் காணப்படும் மெக்னீசியம் தீவிர ஆஸ்துமா மற்றும் ஒற்றைத் தலைவலியை தடுக்கிறது
  • சிறுதானியங்கள் ரத்த அழுத்தத்தை சீராக்கும் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன
  • சிறுதானியங்களில் உள்ள நியாசின் வைட்டமின் பி3 ரத்தத்தில் அதிக அளவு கொழுப்பு சேர்வதை குறைக்கிறது
  • அன்றாடம் சிறுதானியங்களை பயன்படுத்துவோருக்கு இரண்டாம் வகை அதாவது இன்சுலின் சார்ந்த சர்க்கரை நோய் வருவதில்லை
  • சிறுதானியங்களை அதிக அளவில் உணவு பயன்பாட்டில் சேர்க்கும்போது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க உதவுகின்றது
  • ஊட்டச்சத்து குறைவினால் குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்கள் வராமல் இருப்பதற்கு உதவுகின்றன
  • சிறுதானிய பயன்பாட்டில் பெண்களுக்கு பித்தப் பையில் கற்கள் வருவது தடுக்கப்படுகிறது அதிக அளவு நார்ச்சத்து உள்ள சிறுதானியங்கள் புற்றுநோய் வருவதை தடுக்கின்றன
  • உடல் பருமன் கொண்டவர்கள் சிறுதானியங்களை பயன்படுத்தும்போது உடல் எடை சீராக குறைகிறது
  • பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் பைட்டிக் அமிலம் ஆகியவை சிறுதானியங்களில் காணப்படுவதால் சிறுதானியங்களை உட்கொள்வோருக்கு நோய்வராமல் தடுக்கப்படுகின்றன
  • அதுபோலவே வயிற்று புற்றுநோய் ஏற்படாமல் காக்க உதவுகின்றது
  • எலும்பு வளர்ச்சிக்கும் சராசரி ஆரோக்கியத்திற்கும் சிறுதானியங்கள் பெரிதும் துணைபுரிகின்றன

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த சிறுதானியங்களை எளிதாக சமையல் செய்து நமது தினசரி வாழ்க்கையில் அனைவரும் பயன்படுத்தி பயனடையும் வகையில் சிறுதானிய சமையல் குறிப்பு நமது வலைதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. அனைவரும் பயன்படுத்தி மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து பயனடைய வேண்டுகிறோம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *