சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து – உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.

சர்க்கரை நோயின் சில அறிகுறிகள்

அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான ஒரு வகை அறிகுறியாக கூட இருக்கலாம். அதே போல அடிக்கடி தாகம் எடுத்தாலும் அதுவும் சர்க்கரை நோயின் அறுகுறியாகவே பார்க்கப்படுகிறது. கண் பார்வை மங்களாவது, உடல் எடை குறைவது, அடிக்கடி உடல் சோர்வு ஏற்படுவது, உடலில் ஏற்படும் காயங்கள் குணமாக அதிக நாட்கள் எடுத்துக்கொள்வது போன்ற பல அறிகுறிகளை வைத்து சர்க்கரை நோய் இருப்பதை உணரலாம். ஒவ்வொருவருக்கும் இதில் சில அறிகுறிகளோ, பல அறிகுறிகளோ அல்லது வேறு சில அறிகுறிகளோ கூட இருக்கலாம். ஆகையால் சர்க்கரை நோய் இருப்பது போல உணர்ந்தால் உடனே பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

அற்புத சக்தி கொண்ட வெந்தயம்

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மூலிகை மருத்துவத்தில் வெந்தயம் ஒரு சிறந்த மூலிகை மருந்தாக கருதப்படுகிறது மேலும் வெந்தயத்தை எந்த வகையில் பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் என்பதை விரிவாக இங்கு காண்போம்.

ஒரு 100 கிராம் வெந்தயத்தை முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்க வேண்டும் அடுத்த நாள் காலையில் அந்த நீரை வடிகட்டிவிட்டு ஒரு ஈரத்துணியில் அந்த வெந்தயத்தை வெளிச்சம் படாமல் ஒரு பாத்திரத்தில் வைத்து மூடி வைத்துவிட வேண்டும் இத அப்படியே 48 மணி நேரம் விட்டுவிட, அதாவது அடுத்த நாள் இரவு அதற்கு அடுத்த நாள் இரவு அதற்கடுத்த நாள் பகல், அப்போது அந்த வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும் அந்த முளை விட்ட வெந்தயத்தை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து ஒரு ஜாடியில் பத்திரப்படுத்திக் கொள்ளவும் இந்த வெந்தய பொடியை தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவு மிதமான வெந்நீரில் எடுத்து வரவும் இது சாப்பிட்ட பிறகு அரை மணி நேரத்திற்கு எதுவும் சாப்பிட வேண்டாம். இதைத் தொடர்ந்து 48 நாட்கள் எடுத்து வர உங்கள் சர்க்கரையின் அளவு வேகமாக குறைவதை நீங்கள் உறுதி செய்து கொள்ளலாம் இது சர்க்கரை நோய்க்கு சித்தர்களால் அருளப்பட்ட அற்புதமான வீட்டு மூலிகை மருந்து.

ஆவாரை பூ – மூலிகை மருந்து

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ” என்ற சொல்வழக்கு இதன் பெருமையை உணர்த்தும். இரண்டு தேக்கரண்டி அளவு ஆவாரம் பூ பொடியை, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 8-ல் ஒரு பங்காகக் காய்ச்சி குடிக்க வேண்டும். காலை, மாலை  இரண்டு வேளைகள் இவ்வாறு 2 வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வர சர்க்கரை நோய் வெகுவாகக் கட்டுப்படும். பழங்காலத்திலிருந்தே, ஆவாரை சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்தாக சித்தர்களால் அருளப்பட்டுள்ளது. தற்போது நாட்டு மருந்து கடைகள் முதல் அனைத்து இடங்களிலும் ஆவாரம் பூ பொடி விற்பனை செய்யப்படுகிறது.

நாவல் கொட்டை

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து

நீரிழிவு நோயாளிகள் உணவு முறையில் நோயைக்கட்டுக்குள் கொண்டுவர நாவல் பழங்களும் அதன் கொட்டைகளும் உதவுகிறது. இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு என்று மூன்று சுவைகளும் நிறைந்த சுவையான கனி நாவல் பழம். மலைப்பிரதேசங்களில் அதிகம் காணப்படும் இந்த நாவல் பழத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, எரிசத்து நிறைந்திருக்கிறது.

நாவல் மரத்தின் இலை, மரப்பட்டை, பழம், வேர், விதை என அனைத்துமே மருத்துவகுணங்களை கொண்டவை. நாவல் மரத்தின் அனைத்து பகுதிகளுமே இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், வைட்டமின், தாமிர சத்துக்களை கொண்டவை.

நாவல் பழங்களைக் காட்டிலும் அந்த கொட்டையை பதப்படுத்தி பவுடராக்கி சாப்பிட்டால் நீரிழிவு நோயாளிகளுக்கு பலன் அதிகம் என்கிறது ஆய்வுகள். நாவல் பவுடரை தொடர்ந்து எடுத்து கொண்டவர்களை பரிசோதனை செய்ததில் அவர்களது சர்க்கரை அளவும். சிறுநீரில் வெளியேறிய சர்க்கரை அளவும் குறைந்தது கண்டறியப்பட்டது. நாவல் பழத்தின் கொட்டைகளை வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் மைய பொடித்துகொள்வது எளிதானது. தற்போது நாட்டு மருந்து கடைகள் முதல் அனைத்து இடங்களிலும் இதன் கொட்டைகளும், பொடிகளும் விற்பனை செய்யப்படுகிறது.

தினமும் காலை மாலை இருவேளையும் ஒரு டீஸ்பூன் அளவு நாவல் பவுடரை வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் ஒரு மாதத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதை காணலாம். நாவல் கொட்டை பொடி கணையத்தில் இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது.

சர்க்கரை நோய்க்கு சிறுகுறிஞ்சான் :

இதை சர்க்கரைக்கொல்லி என்பர். இலையை அப்படியே மென்று சாப்பிடலாம். அல்லது பொடியாக்கிச் சாப்பிடலாம். தேநீராக்கிக் குடிக்கலாம். 2000 வருடங்களுக்கும் மேலாக இது பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. சிறு குறிஞ்சான் மூலிகை சர்க்கரை வியாதிக்கு மிகச்சிறந்த மருந்து. இது வேலிகளில் கொடியாக படரும். கசப்புச் சுவை உடையது. இலை சிறிதாகவும், முனை கூர்மையாகவும் மிளகாயிலை போன்று காணப்படும். மலையைச் சார்ந்த காடுகளில் இது அதிகம் வளர்கிறது. இத்தகைய தாவரங்களுக்கு சர்க்கரை கொல்லிகள் என்று தமிழில் சொல் வழக்கு உண்டு. முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. இலைகள், விதைகள், வேர் மருத்துவ குணம் கொண்டவை.

சர்க்கரை நோய்க்கு மூலிகை மருந்து

விலங்குகளை வைத்துச் செய்யும் ஆய்வுகளின்படி சிறுகுறிஞ்சான் இன்சுலின் சுரப்பைத்தூண்டுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக்குறைக்கிறது. இன்சுலின் சுரக்கும் இடமான கணையத்தைப் பாதுகாக்கிறது. திசுக்களைத் தூண்டி, க்ளுகோஸை உறிஞ்ச உதவுகிறது. சிறுகுறிஞ்சான் இலையை நிழலில் காயவைத்து இடித்து தூள் செய்து சலித்து வைத்துக்கொண்டு சர்க்கரை வியாதி உள்ளவர்கள் நெய்யில் குழைத்து சாப்பிட்டால் சிறுநீரில் சர்க்கரையின் அளவு குறைந்து நாளைடைவில் நோய் முற்றிலும் குணமடைந்து விடும்.

சிவபெருமானுக்கு உகந்த வில்வம்

வில்வ இலையிலிருந்து எடுக்கப்பட்ட பொருள் நீரிழிவை போக்கும் தன்மையை பரிசோதிக்க ஓர் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்து. எலிகளுக்கு Alloxan கொடுக்கப்பட்டு நீரிழிவு நோயை உண்டாக்கப்பட்டது. ஒரு பிரிவுக்கு இன்சுலின் ஊசிகளும் மற்றவை பிரிவுக்கு வில்வ இலையின் சாறும் (வாய் வழியாக) கொடுக்கப்பட்டன. இந்த ஆராய்ச்சியின் படி வில்வ இலைசாறு கல்லீரலின் Gly cogen ஐ குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வந்தது. ரத்தத்தில் யூரியா, ஸீரம் கொலஸ்ட்ரால் அளவுகளையும் குறைத்தது. இன்சுலின் கொடுக்கப்பட்ட எலிகள் அடைந்த நிவாரணங்களும், வில்வ இலைச் சாற்றினால் அடைந்த நிவாரணங்களும் ஒரே மாதிரி இருந்தன. இதனால் Insulin சிகிச்சைக்கு ஒப்பாக வில்வ இலை சாற்றின் வேலைப்பாடு அமைகிறது.

வில்வ இலை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது இந்த பொடியை ஒரு ஸ்பூன் அளவு தண்ணீரில் விட்டு நன்கு கொதிக்கவிட்டு வடிகட்டி அந்த நீரை ஆறிய பிறகு தினமும் குடித்துவர இன்சுலின் அளவு அதிகரித்து சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =