வீடே மணக்கும் தக்காளி ரசம்
தேவையான பொருட்கள்
தக்காளி – 4 (நறுக்கியது)
பல் பூண்டு – 5 பல்
மிளகாய் – 4
கடுகு உளுத்தம்பருப்பு ஒரு ஸ்பூன்
சிறிதளவு எண்ணெய்
உப்பு தேவையான அளவு
சீரகம் ஒரு ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
ஒரு ஸ்பூன் ரசப்பொடி
சிறிது கொத்தமல்லி மற்றும் கருவேப்பிலை
புளி – நெல்லிக்காய் அளவு கரைத்து வைத்துக் கொள்ளவும்
தண்ணீர் – 3 டம்ளர்
மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்
பெருங்காயத்தூள் சிறிதளவு.
முட்டை குழம்பு செய்வது எப்படி ? Muttai Kulambu
செய்முறை – Gramathu Samayal- Thakkali Rasam Receipe
ஒரு கடாயில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு போட்டு நன்கு வெடிக்கும் வரை தாளிக்கவும் இடித்த பூண்டு, நறுக்கி வைத்துள்ள தக்காளி இவற்றையும் சேர்த்து நன்கு எண்ணெயில் வேகவிடவும். தக்காளி நன்றாக வெந்தவுடன் அத்துடன் பொடித்து வைத்துள்ள மிளகு மற்றும் சீரகத்தை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும். இத்துடன் ஒரு ஸ்பூன் ரசப் பொடி சேர்த்துக் கொள்ளவும், பிறகு இத்துடன் கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி போட்டு நன்கு வதக்கவும்.
நீங்கள் விரும்பினால் இதையும் படிக்க Kollu Rasam
பிறகு கரைத்து வைத்துள்ள புளி கரைசலை 4 கப் தண்ணீர் சேர்த்து இத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சிறிது பெருங்காயத்தூள் சேர்த்துக் கொள்ளவும் இவை அனைத்தையும் நுரையுடன் கொதி வரும்வரை காத்திருக்கும். நுரை வந்ததும் அடுப்பை அணைத்து விடவும். இப்போது சுவையான மனமான தக்காளி ரசம் ரெடி. Gramathu Manathudan Thakkali Rasam Ready.