திணை பொங்கல் தேவையான பொருட்கள்
திணை அரிசி 250 கிராம்
பாசிப் பருப்பு 50 கிராம்
மிளகு அரை தேக்கரண்டி
சீரகம் ஒரு தேக்கரண்டி
நெய் ஒரு மேசைக்கரண்டி
முந்திரி 10
இஞ்சி சிறிதளவு
கருவேப்பிலை ஒரு கொத்து
தண்ணீர் ஐந்து கோப்பை
உப்பு தேவையான அளவு
திணை பொங்கல் (Thinai Foxtail Millet Pongal Tamil Receipes, Recipes) செய்முறை
திணை அரிசியை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து கழுவி வடித்து வைத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை எண்ணெய் விடாமல் வறுத்து கழுவிக் கொள்ளவும். அடுப்பில் குக்கரை வைத்து 5 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பிறகு பாசிப்பருப்பை போட்டு அரை வேக்காடு வேக வைக்கவும்.
அதனுடன் கழுவி வைத்துள்ள Thinai Arisi அரிசியை போட்டு உப்பு சேர்த்து வேகவிடவும் குக்கரில் இரண்டு விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும். தனியாக ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி நெய் விட்டு அத்துடன் உடைத்த முந்திரி பருப்பை போட்டு வறுத்துக் கொள்ளவும். குக்கரில் ஆவி அடங்கியதும் வறுத்த முந்திரியை அதனுடன் சேர்க்கும். அதனுடன் சிறிது நெய் மிளகு சீரகம் கறிவேப்பிலை துருவிய இஞ்சி தாளித்து சேர்க்கவும். பிறகு மீதமுள்ள நெய்யையும் ஊற்றி கிளறி சிறிது நேரம் மூடி வைக்கவும். சுவையான சத்தான பொங்கல் ரெடி. பொங்கல் சிறிது ஆறியவுடன் பரிமாறவும்.
Thinai Foxtail Millet Pongal – திணை பொங்கல் அடங்கிய சத்துக்கள்
கலோரி – 443.9
புரதச்சத்து – 12.7 gm
கொழுப்புச்சத்து – 0.1 gm
இரும்புச்சத்து – 24.2 gm