Home » உடல்நலம் » நீரிழிவை குணப்படுத்தும் ஆவாரை

நீரிழிவை குணப்படுத்தும் ஆவாரை

ஆவாரை – நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் – உடல் நலப்பிரச்சனைகளில் தற்போது முதன்மையானதாக இருப்பது சர்க்கரை நோய் தான். ஏனென்றால் நாம் அதனை கவனிக்க வில்லை என்றால் உயிர் போக்கூடிய அளவுக்கும் உடலை உருக்குலைத்திடும் குணம் அதற்கு உண்டு. மிக முக்கியமாக அதன் அறிகுறிகள் அவ்வளவாக பெரிதாக தெரிவதில்லை. ரத்தப்பரிசோதனை மூலமாகத்தான் நமக்கு சர்க்கரை நோய் இருக்கிறதா இல்லையா என்பதையே கண்டறிய முடிகிறது.

“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ” என்ற சொல்வழக்கு இதன் பெருமையை உணர்த்தும். ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும். ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும்  போக்கும்.


ஆவாரை பூக்களை பசைபோலச் செய்து, புளித்த மோரில் கலக்கிக் குடிக்க வேண்டும். தொடர்ந்து 2 மாதங்கள் வரை இவ்வாறு செய்து வர நீரழிவு கட்டுப்படும்.   ஆவாரை, கொன்றை, நாவல், கடலழிஞ்சல், கோஷ்டம், மருதமரம் ஆகியவற்றின் உலர்ந்த தண்டுப் பட்டைகளை ஒரே அளவாக சேகரித்துக் கொண்டு, நன்கு தூள் செய்து கொள்ளவேண்டும்.

இரண்டு தேக்கரண்டி அளவு தூளை, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு 8-ல் ஒரு பங்காகக் காய்ச்சி குடிக்க வேண்டும். காலை, மாலை  இரண்டு வேளைகள் இவ்வாறு 2 வாரங்கள் வரை தொடர்ந்து செய்து வரலாம். பழங்காலத்திலிருந்தே, ஆவாரைக்கும் நீரிழிவை கட்டுப்படுத்தும் செயல்முறைக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்துள்ளது.

இன்று, நீரிழிவு மருத்துவத்தில் பயன்படும் பல காப்புரிமை செய்யப்பட்ட இந்திய மருந்துகள் ஆவாரையிலிருந்து செய்யப்படுகின்றன. ஆவாரை இரத்தத்தில் யூரியாவின் அளவைக் குறைக்கும்.   மாதவிடாயின்போது ஏற்படும் அதிக இரத்தப் போக்குக் கட்டுப்பட 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து, ஒரு லிட்டர் நீரில் இட்டு, 200 மி.லி. ஆக சுண்டக் காய்ச்சி, 50 மி.லி. அளவில் காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.  

தோல் அரிப்பு மற்றும் நமைச்சல் குணமாக பசுமையான அல்லது உலர்ந்த பூக்களுடன், சமஅளவு பச்சைப்பயறு சேர்த்து அரைத்து, வெந்நீர் கலந்து பசையாக்கி,  உடம்பில் தேய்த்து ஊறவைத்து, சிறிது நேரம் கழித்துக் குளிக்க வேண்டும்.   ஆவாரையின் வேர், இலை, பட்டை, பூ, காய் இவற்றைச் சம எடையாகச் சேகரித்து, காயவைத்து, இடித்துத் தூளாக்கி வைத்துக் கொண்டு, 10 கிராம் வீதம், காலை, மதியம், மாலை வேளைகளில் வெந்நீருடன் உட்கொள்ள வேண்டும்.   பிரமேகம், மதுமேகம், மிகுதாகம், மிகுபசி, உடல்மெலிவு, பலக்குறைவு ஆகியவை தீரும். உடல் பலம் பெறும். 90 நாட்கள் வரை தொடர்ந்து சாப்பிடலாம்.

ஆவாரை இலைகளுக்கு கல்லீரலைப் பாதுகாக்கும் தன்மை (Hepato-protective activity) இருப்பதாகவும் தெரியவருகிறது. சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்குப் பயன்படுத்தப்படும் ஆகச் சிறந்த மூலிகை ஆவாரை. ‘நீர்க்கோவைக்குத் தும்பை… நீரிழிவுக்கு ஆவாரை’ என்ற மூலிகை மொழியும் உண்டு.

உலர்ந்த / பசுமையான ஆவாரம் பூக்களை மூன்று தேக்கரண்டி எடுத்து, நீரிலிட்டு நன்றாகக் கொதிக்க வைத்து, சுவைக்குச் சிறிது பனங்கற்கண்டு சேர்த்து, வாரத்தில் மூன்று நாட்கள் குடிக்கலாம். துவர்ப்பு – இனிப்புச் சுவையுடன் கூடிய இந்த பானம், கைகால்களில் உண்டாகும் எரிச்சலைக் குறைக்க உதவும். உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுத்துச் சிறுநீர் எரிச்சலைக் குறைக்கும்.

வாய்ப்புண் இருக்குறவங்க ஆவாரை பட்டையை குடிநீரிட்டு வாய் கொப்பளிச்சு வந்தா, நல்ல பலன் கிடைக்கும். கண்சிவப்பு (Conjunctivitis) இருக்குறவங்க ஆவாரை விதையை பொடி செஞ்சு நீரில் குழப்பி கண் இமை மேல பத்துபோட்டா குணமாகும். ஆவாரை பிசின் 4-10 கிராம் எடுத்து தண்ணியில கலந்து குடிச்சு வந்தா நீரிழிவு, வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

கண்கள் தெளிவடைய

ஆவாரை இலை, பட்டை, பூ, விதை என அனைத்துமே ஏதோனும் ஒரு விதத்தில் நமக்கு பயன் தருகிறது. அதன் விதையைக் காய வைத்து பொடி செய்து வைத்துக்கொண்டு, சிறிது நீர்விட்டுக் குழைத்து கண் இமைகளைச் சுற்றிப் பற்றாகப் போட்டு வைக்க கண்களின் எரிச்சல், நீர் வடிதல் ஆகிய பிரச்னைகளும் குணமாகும்.

இதயம் பலமடைய

ஆவாரைப் பட்டையை உலர்த்தித் தூளாக்கி வைத்துக்கொண்டு, தினமும் காலையில் ஒரு தேக்கரண்டி தூளை நீரில் இட்டுக் கொதிக்க வைத்து ஆற வைத்த பின் குடிப்பதால் சிறுநீர்த்தாரை எரிச்சல் அடங்கும். ரத்தம் கெட்டிப்படுவது தவிர்க்கப்பட்டு இதய அடைப்புகள் வராமல் தடுக்கப்படும் இதயம் பலமடையும் இதையே வாய் கொப்பளிக்க ஈறு நோய்கள் விலகி பற்கள் பலம் பெரும்.

பொடுகு தொல்லை நீங்க

ஆவாரம் பூவை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு சம அளவு பாசிப்பயறு மாவு மற்றும் சீயக்காய் சேர்த்து தலைக்குத் தேய்த்து குளித்து வருவதால் தலைப்பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியன குணமாகும். கூந்தல் செழுமையாகவும், கருமையாகவும் வளரும் பொடுகு தொல்லை நீங்கும்.