Madras Samayal recipe Egg Bonda Bajji – முட்டை போண்டா. மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் வேளையில் பலருக்கும் சூடாக பஜ்ஜி, போண்டா சாப்பிட வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதுவும் மழை பெய்தால் சொல்லவே வேண்டாம் இந்த ஆசை இன்னும் அதிகம் இருக்கும். இந்நிலையில் உங்கள் வீட்டில் முட்டை இருந்தால், அதைக் கொண்டு ஒரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுங்கள். அது தான் சில்லி முட்டை போண்டா. இந்த ரெசிபியை மாலை வேளையில் பசியுடன் இருக்கும் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.
உங்களுக்கு சில்லி முட்டை போண்டா எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
கீழே சில்லி முட்டை போண்டாவின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Egg Bonda Bajji Recipe செய்ய தேவையான பொருட்கள்:
முட்டை போண்டாவிற்கு…
* வேக வைத்த முட்டை – 4
* கடலை மாவு – 3/4 கப்
* அரிசி மாவு – 1/4 கப்
* பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
*மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* தண்ணீர் – தேவையான அளவு
* எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு முட்டை சில்லிக்கு…
* எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
* கடுகு – 1/4 டீஸ்பூன்
* பச்சை மிளகாய் – 3
* வரமிளகாய் – 2
* கறிவேப்பிலை – சிறிது
* இஞ்சி பூண்டு விழுது – 1 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)
* மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
* சீரகத் தூள் – 1/2 டீஸ்பூன்
* கரம் மசாலா – 1 டீஸ்பூன்
* மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
* உப்பு – சுவைக்கேற்ப
* கொத்தமல்லி – சிறிது
சில்லி சிக்கன் 65 செய்வது எப்படி ? Chicken 65
Madras Samayal recipe Egg Bonda Bajji முட்டை போண்டா செய்முறை:
* முதலில் ஒரு பௌலில் முட்டை போண்டாவிற்கு கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நீர் சேர்த்து ஓரளவு கெட்டியாக கலந்து கொள்ள வேண்டும். * பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
- எண்ணெய் சூடானதும் வேக வைத்த முட்டைகளை இரண்டாக வெட்டி, போண்டா மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இப்போது முட்டை போண்டா தயார்.
- பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பச்சை மிளகாய், வரமிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு பேஸ்ட் ஆகியவற்றை சேர்த்து வதக்கி, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- அடுத்து அதில் மசாலா பொடிகளை ஒவ்வொன்றாக சேர்த்து, பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
- மசாலாவில் இருந்து பச்சை வாசனை போனதும், முட்டை போண்டாக்களை சேர்த்து நன்கு கிளறி இறக்கி, கொத்தமல்லியைத் தூவினால், சில்லி முட்டை போண்டா தயார்.
முட்டை குழம்பு செய்வது எப்படி ? Muttai Kulambu Seivathu Eppadi