சோளம் சுகியன் செய்ய தேவையான பொருட்கள்
மஞ்சள் சோளம் – அரை கப்
பொடித்த வெல்லம் – அரை கப்
தேங்காய் துருவல் – கால் கப்
உளுத்தம்பருப்பு – கால் கப்
முந்திரிப்பருப்பு – 4
ஏலக்காய்த்தூள் – அரை ஸ்பூன்
நெய் – 2 ஸ்பூன்
உப்பு எண்ணெய் தேவையான அளவு
சிறுதானிய சமையல் – செய்முறை
உளுத்தம்பருப்பை நன்றாக ஊற வைத்து நீரை வடிகட்டி 1 சிட்டிகை அளவு உப்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். சோளத்தை தனியாக ஊற வைத்து நீரை வடித்து, தேங்காய் துருவல் ஏலக்காய் தூள் வெல்லம் சேர்த்து கரகரப்பாக அரைத்து தனியாக வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி அரைத்த சோள விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி ஆற வைத்து சிறிய உருண்டைகளாக இந்த உருண்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம் மாவில் தோய்த்து நன்றாக காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து சுவையான சோளம் சுகியன் சூடாக பரிமாறவும்.
சிறுதானியம் சோளம் – அடங்கியுள்ள சத்துக்கள் – Tamil Receipes
புரதம், மாவுச்சத்து, கொழுப்பு சத்து, இரும்பு சத்து, கால்சியம், தயாமின், நயாசின் தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து.
மருத்துவ பயன்கள்
நீரழிவு நோய், செரிமான குறைகள், ரத்தசோகை, சர்க்கரை நோய் முதலியவற்றை குணப்படுத்துகிறது,
தயாரிக்கப்படும் உணவுப் பதார்த்தங்கள்
சோள சோறு, சோள கலி, சோள அடை, சோள பால், சோள வடை, சோள பாயாசம், சோள இட்லி, சோள தோசை சோள பிஸ்கட், சோள ரொட்டி முதலியன தயாரிக்கப்படுகிறது.