Vasthu in tamil

Vasthu in Tamil – வாஸ்து சாஸ்திர தகவல்கள்

Vasthu in Tamil – வாஸ்து சாஸ்திர தகவல்கள். நாம் வசிக்கும் வீட்டிற்கு மட்டும்தான் வாஸ்துவா? இல்லை… வாடகை வீட்டில் உள்ள வாஸ்து பாதிப்பு நம்மை பாதிக்குமா? இந்த பதிவில் அணைத்து வாஸ்து சாஸ்திர தகவல்கள் மிகவும் எளிமையா அனைவருக்கும் பயன்படும் வகையில் நம் தளத்தில் அளிக்கப்பட்டு உள்ளது.

அடிக்கடி வேலை மாற்றத்திற்கும், வேலை இழப்பு … வாஸ்துவிற்கு தொடர்பு உண்டா?

இன்றைய சூழ்நிலையில் இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொண்டாலே போதும் என்பதுதான் பலரது மனநிலையாகும். அந்த அளவு ஒரு இக்கட்டான சூழ்நிலையை தற்சமயம் எதிர் கொண்டிருக்கிறோம்.

 ஒரு சிலருக்கு நல்ல திறமை இருக்கும், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை உடனே முடிக்கும் திறமை, அற்பணிப்புடன் வேலை செய்து கொண்டிருப்பார்கள். ஆனால், அவர்களால் ஒரு வருடமோ அல்லது ஒரு சில மாதங்களுக்குள் அந்த வேலையை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிடும்.

இதற்கான காரணம் கீழ்கண்டவையாக இருக்கலாம் :

 வேலையின் அழுத்தம்.

 மேல் அதிகாரிகளின் தவறான போக்கிற்கு உடன்படாமை.  உடன் வேலை செய்பவர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் அல்லது சண்டை.

 இப்படி அடிக்கடி வேலை மாற்றம் செய்து கொண்டிருப்பவர்களின் வீட்டை கூர்ந்து நோக்கினால், அவர்கள் வீட்டில் நிச்சயம் வாஸ்து தவறுகள் இருக்கவே செய்யும்.

 ஒரு வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதி பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது தென்மேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்ற நிகழ்வு ஏற்பட வாய்ப்புள்ளது.

 ஒரு வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு மூடப்பட்ட அமைப்பு.  வடகிழக்கு பூஜையறை அமைப்பு.  வீட்டின் தென்மேற்கில் ஏற்படும் வாஸ்து தவறுகள்.  போன்றவை ஒருவரின் வேலை அடிக்கடி மாற்றம் ஏற்படவோ அல்லது வேலை இழப்பு ஏற்படவோ வாய்ப்புள்ளது.

மேற்கண்ட திருத்தங்களை வாஸ்து நிபுணர் துணை கொண்டு சரி செய்யும்போது ஒரு நல்ல நிரந்தர, நிம்மதியை கொடுக்கும் வேலையை பெறலாம். சிறப்புடன் வாழலாம்.

You may also Read Kitchen Vastu in English

2022 Vasthu Dates – வாஸ்து நாட்கள்

அடுக்குமாடி வீடுகள் (Vasthu for Apartment) வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு அழைத்து செல்லுமா?

இன்றைய அவசர உலகில் மனிதன் பணத்தை விரயம் செய்யலாம். ஆனால், நேரத்தை விரயம் செய்யக்கூடாது. அதுவும் வேலைக்கு செல்லும்போது நேர விரயம் அதிகம் ஏற்படுகிறது. இதனால் மனிதன் அலுவலகம் அல்லது தொழிற்சாலைக்கு மிக அருகில் அமையும் அடுக்குமாடி கலாச்சாரத்திற்கு அடிமையாகி விடுகிறான்.

ஒரு சிலர் அவர்களது பொருளாதாரத்தை கருதி தனி வீடு கிடைக்காமல் இதுபோன்ற அடுக்குமாடி வீட்டை தேர்ந்தெடுத்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் அந்த வீடு அவர்களின் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி விடுகின்றது. இது எதற்காக ஏற்படுகிறது என்று கூட அவர்களால் கணிக்க முடியாது. பொதுவாகவே, அடுக்குமாடி வீடுகளுக்கு வாஸ்து அமைவது என்பது மிகவும் கடினம்.

இருப்பினும் அடுக்குமாடி வீடுகளில் பார்க்க வேண்டிய சில அடிப்படை வாஸ்து விதிகளை இப்போது பார்ப்போம்.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி பொது சுவராக இல்லாமல் திறப்புகளுடன் வருவது சிறப்பு.

தலைவாசல் உச்சத்தில் வருவது சிறப்பு. தாய்சுவரின் எந்த மூலையும் வெட்டுப்படாமல் வருவது சிறப்பு.

மிக முக்கியமாக வடக்கும், கிழக்கும் ஜன்னல் அமைப்பு இல்லாதவை பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

கழிவறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக இருக்கக்கூடாது. சமையலறை மற்றும் பூஜையறை வடகிழக்கிலும், தென்மேற்கிலும் கண்டிப்பாக வரக்கூடாது.

மிக முக்கியமாக தென்மேற்கில் அவசியம் மாஸ்டர் பெட்ரூம் வருவது சிறப்பு. மொத்த இடத்திற்கு தவறாக தெருக்குத்து இல்லாமல் இருப்பது நல்லது.

இன்றைய சூழலில் அடுக்குமாடி குடியிருப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதில் மேற்கண்டவைகளை கவனத்தில் கொண்டும் வாஸ்து நிபுணரின் ஆலோசனையின்படி நல்ல வீட்டை தேர்ந்தெடுப்பது நல்வாழ்க்கையை வாழ வழி கிடைக்கும்.

Vasthu for Debt – கடனுக்கு மேல் கடன் ஏற்பட காரணம்..!!

பொதுவாக வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இருக்கும் ஆசை ஒரு நல்ல வீடு கட்ட வேண்டும் என்பதுதான்.

அதிலும், தொழில் முனைவோர் என்றால் கேட்கவே வேண்டாம். அவர்களுடைய தொழிலில் சிறிது வளர்ச்சி ஏற்பட்டாலே போதும், அவர்களுடைய முதல் குறிக்கோள் கடன் வாங்கியாவது சொந்தமாக அழகிய வீடு கட்ட வேண்டும் என்பதாகிவிடும். அப்படி கட்டப்படும் வீடு அவர்களது ஆசைக்கான வீடாகவும் அமைந்துவிடுகிறது.

அப்படி கட்டப்படும் வீட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுவதில்லை. அந்த வீடும் அவர்களுடைய ஆசையை பூர்த்தி செய்வதற்காக ஒரு சில மாதங்கள் அல்லது வருடங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதன்பிறகு வாஸ்து தவறுகளினால் அதனுடைய பாதிப்பை ஏற்படுத்த ஆரம்பித்துவிடும்.

ஏற்கனவே, தொழில் நடத்த வாங்கிய கடனும், தற்சமயம் வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனும் சேர்ந்து கட்ட முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி கொண்டிருப்பார்கள். இது போன்ற நிலை ஏற்பட அந்த வீட்டில் வாஸ்து அமைப்புகள் கீழ்கண்டவாறு தவறாக இருக்க வாய்ப்புள்ளது.

வீட்டின் வடக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருப்பது. வடகிழக்கு உச்சத்தில் ஜன்னல் அமைப்பு இல்லாமல் இருப்பது

கிழக்கு நடுப்பகுதியில் கழிவறை. தென்மேற்கு அல்லது வடமேற்கு மூலை படிக்கட்டு, அதன் அடியில் கழிவறை இருப்பது

தென்மேற்கில் கழிவறை அமைப்புடன் இருத்தல். போன்ற அமைப்புகள் அந்த வீட்டில் நிச்சயம் அமைய பெற்றிருக்கும்.

இதுபோன்ற தவறுகள் ஏதேனும் உங்கள் வீட்டில் இருப்பின் ஒரு நல்ல வாஸ்து நிபுணரை தொடர்பு கொண்டு அவருடைய அறிவுறுத்தலின் பேரில் உங்கள் வீட்டை சரி செய்யும் பட்சத்தில் கடன் என்ற சிரமத்திலிருந்து நிச்சயம் விடுபட முடியும்.

Square and Rectangle Vasthu – சதுரமும், செவ்வகமும் வீட்டிற்கும், அதன் அறைகளுக்கும் பொருந்தும் விதி..!!

வாஸ்துவில் எந்தவொரு பகுதியும் வெட்டப்பட்டோ அல்லது நீண்டோ இருக்கக்கூடாது. சதுரம், செவ்வகமாக மட்டுமே இருக்க வேண்டும் என்பது விதி.

ஆனால், இன்று வீடுதானே சதுரம், செவ்வகமாக இருக்க வேண்டும். அதில் இருக்கும் அறைகள் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற எண்ணத்திலும், இடம் இல்லாத போதும், சமயத்தில் அழகிற்காகவும் ஒரு அறையின் மூலை பகுதியை நீட்டியோ அல்லது வெட்டிய அமைப்பிலோ அமைத்துவிடுகிறார்கள். அப்படி அமைக்கும் பட்சத்தில் அடுத்த அறையில் இணையும் மற்றொரு பகுதி வெட்டப்பட்டோ அல்லது நீண்டோ அமைந்துவிடுகின்றது. இதனால் அந்த திசையானது பாதிப்புகளை ஏற்படுத்திவிடுகிறது.

உதாரணமாக, தென்மேற்கு அறையில் தென்மேற்கு பகுதியில் பீரோ கிழக்கு நோக்கி வைப்பது மிகவும் நல்லது என்று கூறுகிறோம். உடனே அந்த பீரோ எந்த விதத்திலும் அந்த அறைக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்ற காரணத்திற்காகவும், அழகான அமைப்பிற்காகவும், அந்த தென்மேற்கு மூலையை சிறிது நீட்டித்து பீரோவை உள்ளே அமைத்துவிடுவோம்.

இதன் காரணமாக அந்த தென்மேற்கு பகுதி நீண்டும் மற்றும் அடுத்த அறையின் ஒரு பகுதி வெட்டப்பட்ட அமைப்பையும் ஏற்படுத்திவிடும்.

இதன் காரணமாக அந்த திசைகளின் பாதிப்புகளை சந்திக்க நேரிடும். ஆகையால் சதுரம், செவ்வகம் வீட்டிற்கு அல்லது இடத்திற்கு மட்டும் இல்லை. வீட்டில் கட்டப்படும் அனைத்து அறைகளுக்கும், அனைத்து மூலைகளுக்கும் சேர்த்து வாஸ்துவில் சொல்லப்பட்ட விதியாகும்.

வாஸ்து முறைப்படி நம் வீட்டை அமைப்போம்…!! சிறப்பான வாழ்வை வாழ்வோம்..!!

இன்றைய நல்ல நேரம் தெரிந்து கொள்ள  Today Nalla Neram

Vasthu for Money Issue – பணம் வந்த வேகத்தில் விரயமாகிறதா? வாஸ்து காரணங்கள்..!!

எவ்வளவு சம்பாதித்தும் வீட்டில் பணம் தங்குவதில்லை என சிலர் புலம்புகிறார்கள். எதற்காக செலவு செய்கிறோம்? என்று தெரியாமல் பணம் பல வகையில் செலவாகிறது. வீட்டு வாஸ்து அமைப்பிற்கும், பண விரயம் ஆவதற்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா? என பார்ப்போம்.

தென்மேற்கு பகுதியும், பணமும் :

குடும்ப தலைவர் தென்மேற்கு பகுதி அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் இருப்பது. வீட்டின் தென்மேற்கு பகுதி தெருப்பார்வை அல்லது தெருத்தாக்கம் இருப்பது. தென்மேற்கு பகுதி வடகிழக்கு பகுதியை விட தாழ்வாக அமைவது.

தென்மேற்கில் உள்ள அறையில் மட்டுமே பணப்பெட்டியை வைக்க வேண்டும். பணத்தை தேக்கு மரப்பெட்டியில் வைப்பது மேலும் சிறப்பு. எதையும் தேக்கி வைத்துக்கொள்ளும் என்பதால்தான் தேக்கு மரம் என்று பெயர் வந்தது. அதன் உறுதியான நிலைத்தத்தன்மை நம்மிடம் பணத்தை தங்கிட செய்யும்.

ராகு காலம் நல்ல நேரம் அறிந்து கொள்ள Rahukalam today

வடமேற்கு பகுதியும், பணமும் :

வீட்டின் வடமேற்கு பகுதி பாதிக்கப்பட்டிருந்தால் பணம் விரயமாகும் வாய்ப்புகள் இருக்கும்.

பணம் எப்படி விரயமாகிறது? என்று பார்க்க வேண்டும். மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதோ அல்லது ஜாமீன் கையெழுத்து போன்று ஏதேனும் இருந்தால் அதுவும் விரயமே. இது நிச்சயம் உங்கள் வீட்டில் வடக்கும், மேற்கும் சந்திக்கக்கூடிய வடமேற்கு மூலையில் தவறு இருக்கலாம். உதாரணமாக, வடமேற்கு கூரை பகுதி தாழ்வாக இருப்பது.

நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் பணம் என்பது மிக முக்கியமானது. சுப செலவுகளான திருமணம், வீடு கட்டுதல் போன்ற செலவுகள் செய்ய நேர்ந்தால் நல்லது. அதுவே மருத்துவ செலவுகள், கோர்ட் கேஸ் செலவுகள் போல விரைய செலவாகவும், வீண் செலவாகவும் இருக்கக்கூடாது.

செல்வம் குறைய வேறு முக்கிய காரணங்கள் :

வீட்டில் ஆண்கள் விளக்கேற்றினால் வீட்டில் உள்ள பணம் விரயமாகும். குழாய்களில் தண்ணீர் சொட்டுவது இருந்தால் வீணாகும் நீரைப் போல வீட்டில் உள்ள செல்வ நிலையும் வெளியேறும்.

அதிக நேரம் ஈரத்துணிகள் போட்டு வைப்பது. வீட்டில் குறைந்தபட்ச வெளிச்சம் இல்லாமல் மின்சாரம் சேமிப்பது. வீட்டில் அதிக குப்பைகள் மற்றும் ஒட்டடை இருப்பது. சூரிய மறைவுக்குப் பின் வீட்டை பெருக்குவது, துடைப்பது.

தேவையில்லாத பொருட்களை வீட்டின் பரண் மேல் வைத்திருக்கும்போது எதிர்மறை எண்ணங்களை உருவாக்கும். பறவைகளுக்கு, தெரு நாய்களுக்கு உணவு வழங்கினால் பண விரயம் குறையும்.

Tamil Vasthu for Land selection – வீடு மனையை தேர்வு செய்வதில்… இவ்வளவு நுணுக்கங்கள் இருக்கா?

கேள்வி :

நான் சொந்தமாக வீடு கட்ட ஒரு மனை வாங்க இருக்கிறேன். நான் எப்படிப்பட்ட மனையை தேர்வு செய்ய வேண்டும்.

பதில் :

சராசரி மனிதனின் வாழ்நாள் கனவே ‘சொந்தமாக வீடு’ கட்டி அதில் வசிக்க வேண்டும் என்பதே. அதுவே வாழ்நாள் லட்சியமாக உள்ளது. அதற்காகவே தனது பெரும் பகுதி வாழ்க்கையை அர்ப்பணிக்கிறான்.

எல்லா நிலங்களிலும் விவசாயம் செய்ய முடியாது. அதுபோல எல்லா மனையும் வீடு கட்டி வசிப்பதற்கு ஏற்ற மனை அல்ல.

பல நிறுவனங்கள் தங்களது மனையை விற்பனை செய்ய பெரிய பள்ளிக்கு அருகில், மருத்துவமனைக்கு மிக அருகில், பேருந்து நிலையம் பக்கத்தில் என்பதை மட்டுமே மீண்டும் மீண்டும் வலியுறுத்தி விளம்பரம் செய்கின்றனர். இது மக்கள் மனதில் பதிந்து உள்ளது.

மக்களுக்கு குழந்தைகள் படிக்கும் பள்ளி மற்றும் கல்லூரியை தேர்ந்தெடுப்பதில் உள்ள கவனம் வீடு கட்டும் மனையை தேர்ந்தெடுப்பதில் இருப்பது இல்லை.

கவனிக்க வேண்டிய விஷயங்கள் :

  1. மலைகள், குன்றுகள், கோவில், செல்போன் டவர், ஓடை, ஆறு, கிணறு, உயரமான மரங்கள், பொது குளம், பாலம், பள்ளிக்கூடம், பூங்கா, பொது போர், பெரிய கட்டிடங்கள், கல்லூரி, ரயில்வே தண்டவாளம், மின்மயானம், காவல் நிலையம் போன்றவை நாம் வாங்கும் இடத்திற்கு அருகில் வரலாமா?…. வருவதாய் இருந்தால் எந்த திசையில் வர வேண்டும்? எந்த திசையில் வரக்கூடாது? எவற்றின் அருகே நாம் குடியிருக்கக்கூடாது?
  2. சாலை தெரு, மனைக்கு எந்த பக்கம் வருகிறது?
  3. தெருக்குத்து அல்லது தெருப்பார்வை மனைக்கு இருக்கின்றதா?
  4. பக்கத்தில் உள்ள கட்டிடங்கள் மனைக்கு நல்ல விளைவுகளை கொடுக்குமா?
  5. மனையின் வடிவத்தை கவனிக்க வேண்டுமா?

இதுபோன்ற பல நுணுக்கங்களை ஆராய்ந்து தெளிந்த பின்னரே இடத்தை தேர்வு செய்ய வேண்டும்.

Vasthu for Home Alteration – வீட்டை நமது வசதிக்காக மாற்றி அமைக்கும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்..!!

வீடு கட்டுவது என்பது அனைவரது கனவு. அதேசமயம் வாடகை வீட்டில் இருப்பவர்கள் பல இன்னல்களை சந்திப்பதால் ஒரு சொந்த வீடு இருந்தால்போதும் என்ற எண்ணத்தில் வீட்டை சிறியதாகவோ அல்லது அவர்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப கட்டி விடுகிறார்கள். பிறகு, அவர்களுடைய பொருளாதாரம் படிப்படியாக உயரும்போது இந்த இடம் நமக்கு போதவில்லை என்ற எண்ணம் ஏற்படும். அதனால் வீட்டை மாற்றி அமைக்கும்போது பல தவறுகளையும் அல்லது ஆடம்பரத்திற்கு கட்டும் நோக்கத்தில் சிறிய தவறுகளையும் செய்து விடுகின்றனர்.

புதிதாக எடுக்கும் அறை படுக்கையறையோ, பாத்ரூமோ, கார் நிறுத்தும் அறையோ அல்லது வெயிலுக்காக போடப்படும் போர்டிக்கோவோ என எதுவாக இருந்தாலும் வாஸ்து விதிகளுக்கு உட்பட்டு இருக்கும்போது பலன்களும் சிறப்பாக இருக்கும்.

பொதுவாக ஏற்படும் தவறுகள் :

வீட்டிற்கு வெளியே கிளை அறை எடுக்கும்போது அது சுவரோடு ஒட்டி வருவது. கிளை அறை மதில்சுவரின் நான்கு மூலைகளில் ஏதோ ஒரு மூலையில் வருவது.

கீழ்நிலை தண்ணீர்தொட்டியை அமைக்க தவறான திசையில் பள்ளம் தோண்டுவது. திறப்புகள் இருக்க வேண்டிய திசைகளில் புதிதாக சுவர் அமைவதால் அவ்விடம் மூடப்பட்ட அமைப்பாகிவிடுதல்.

மாடியில் புதிதாய் அறை எடுக்கும்போது மூலைகளில் தனித்தனியே அறை அமைத்து விடுவது. வாகனங்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் அறை பாரம் வரக்கூடாத இடத்தில் வந்து விடுவது.

பெரிய வீடுகளில் காவலாளிக்கு என சிறிய அறை அமைக்கும்போது தவறான அமைப்பில் வருவது. தொழில் நிறுவனங்களில் புதிதாக கோவில் அமைக்கும்போது தவறு ஏற்படுதல்.

சமையலறையில் மாடுலர் கிச்சன் அமைக்கும்போது பாரம் வரக்கூடாத இடத்தில் அமைப்பதும், சமையல் எரிவாயு சிலிண்டர் சமையலறையை விட்டு வெளியே வைத்து பைப் வழியே இணைப்பு கொடுப்பதும் தவறு. மதில்சுவர் எடுக்கும்போது இடத்தை மட்டும் கணக்கில் கொண்டு எடுப்பது.

ஊஞ்சல் அமைப்பது. வீட்டிற்கு உள்ளே மாடிப்படியை தவறான இடத்தில் அமைத்து விடுவது. மோட்டார் ரூமை மாடிப்படிக்கு கீழ் அமைப்பது. இப்படி கையில் பணம் வரும்போது சிறு சிறு மாற்றங்களை அவரவர் வசதிக்குகேற்ப செய்ய முற்படும்போது சிறு தவறும் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்திவிடும்.

வீட்டில் திருத்தம் செய்வதற்கு முன் ஆழமாக யோசித்து வாஸ்து விதிகளை மதித்து வீட்டை சரிசெய்தால் ஆனந்தமான வாழ்க்கை வாழலாம்.

கடன் சுமையை ஏற்படுத்தும் வாஸ்து அமைப்புகள்..!!

ஒவ்வொரு மனிதனும் தனக்காக ஒரு சொந்த வீடு இருப்பதை வாழ்நாள் லட்சியமாக கொள்கிறான். புதிதாக கட்டிய வீட்டில் சந்தோஷமாக குடும்பத்துடன் வாழும்போது வீடு கட்ட வாங்கிய கடன் அதிகமாகி, அந்த கடனுக்காக வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்படுகிறான். அவ்வாறு கடன் அதிகமாக உயர்வதற்கு கீழ்க்கண்ட வாஸ்து காரணங்களாக இருக்கலாம்.

உங்களுடைய வீட்டிற்கு தென்மேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் இருப்பது.

வடக்கு மற்றும் கிழக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருப்பது. வீட்டிற்கு நான்கு புறமும் மதில் சுவர் இல்லாமல் இருப்பது.

வீட்டிற்கு வடக்கு அல்லது வடமேற்கு பகுதியில் நுழைவாயில், கேட், கிணறு, ஆள்துளை கிணறு, குளம் போன்ற அமைப்புகள் இருப்பது.

மேலும், வடமேற்கில் கழிவுநீர்த்தொட்டி அமைக்கும்போது வீட்டை ஒட்டியோ அல்லது வீட்டிற்கு உள்ளே வரும் வகையில் இருப்பது.

வீட்டின் உள்ளே படி அமைக்கும்போது ஈசான்ய பகுதி, வடமேற்கு அல்லது தென்கிழக்கில் உள் மூலைப்படி அமைப்புகளுடன் இருப்பது

வீட்டின் போர்டிக்கோ அமைக்கும்போது பில்லர் போன்ற அமைப்பு வடக்கு மற்றும் கிழக்கில் இருப்பது. அப்படி போர்டிக்கோ அமைக்கும்போது வெட்டுப்பட்ட அமைப்புடன் வருவது. பூஜையறை வடக்கிழக்கு அல்லது தென்மேற்கில் வருமாறு அமைத்து இருப்பது.

மேற்கண்ட சில அமைப்புகளுடன் மேலும் சில தவறுகள் இருக்கும்போது வீட்டில் உள்ள ஆண்களின் வருமானத்தில் தடை, கடன் அதிகமாக இருத்தல் போன்ற விளைவுகள் ஏற்படும்.

சிலர், நான் வாஸ்து முறைபடிதான் வீட்டை கட்டி உள்ளேன் எனவும், அதனால் வாஸ்து பாதிப்புகள் இல்லை எனவும் கூறுவார்கள். ஆனால், தங்களையும் அறியாமல் சில தவறுகளை செய்து இருப்பார்கள். அதுவே கடன் ஏற்பட காரணமாகிவிடும். ஒரு தேர்ந்த வாஸ்து நிபுணர் மட்டுமே நீங்கள் செய்த தவறுகளை கண்டறிவார். அவைகளை திருத்தி வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்.

வீட்டின் எந்த பகுதியில் சமையலறை அமைக்கலாம்?

சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பதே சிறந்தது. நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும். வடமேற்கு மூலை இரண்டாவது வாய்ப்பு.

தென்கிழக்கு : இந்த பகுதியில் சமையலறை வருவது மிகவும் சிறப்பு. தென்கிழக்கில் சமையலயறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கில் அமைத்துக்கொள்ளலாம். வீட்டில் உள்ள பெண்களின் உடல்நலம், மனநிம்மதி, மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.

வடமேற்கு : வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வது மிகவும் அவசியமானது. புதிய நண்பர்களும் அவர்களால் தொழிலில் முன்னேற்றமும் அமையும். கட்டிட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வடகிழக்கு : இந்த பகுதியில் சமையலறை அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் வீட்டில் செலவுகள் அதிகரித்து வறுமை நிலை உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், உடல்நல பாதிப்புகள், விபத்து, குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். ஆண்களை பயனற்று போகச் செய்யும். வீட்டில் உள்ள ஆண் வாரிசு பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். சில இடங்களில் அகால மரணமும் ஏற்படலாம். வீட்டு பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். அப்படி வாய்ப்பு இருந்தாலும், ஆண் குழந்தைகள் பெறும் வாய்ப்பு அரிதாகும்.

தெற்கு : தெற்கு பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைக்கும்போது வறுமையை வழிய வர வழைக்கும். மன உளைச்சல் பெருகும். நிம்மதி கெடும்.

தென்மேற்கு : தென்மேற்கில் சமையலறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த வீட்டின் ஆண், பெண் இருவரையும் அதுபோன்ற அமைப்புகள் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கலாம். மருத்துவத்திற்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன், வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பத்தகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை கொடுக்கும்.

மேற்கு : மேற்கு பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்கவும். இதனால் வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி பாதிக்கப்படும்.

வடக்கு : வீட்டின் வடக்கு பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். அப்படி அமைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.

கிழக்கு : இந்த பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். குடும்பத்தலைவியின் உடல் நலனும், மகிழ்வும், நிம்மதியும் கெடும்.

இதுபோன்று மேலும் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு நாம் நமது வீட்டை அமைக்கும்போது சிறப்பான வாழ்வு அமையும்.

Tamil Vasthu for Kitchen – வீட்டின் எந்த பகுதியில் சமையலறை அமைக்கலாம்?

சமையலறை வீட்டின் தென்கிழக்கு மூலையில் அமைப்பதே சிறந்தது. நல்ல காற்றோட்டமும், வெளிச்சமும் கிடைக்கும். வடமேற்கு மூலை இரண்டாவது வாய்ப்பு.

தென்கிழக்கு : இந்த பகுதியில் சமையலறை வருவது மிகவும் சிறப்பு. தென்கிழக்கில் சமையலயறை அமைக்க முடியாதவர்கள் வடமேற்கில் அமைத்துக்கொள்ளலாம். வீட்டில் உள்ள பெண்களின் உடல்நலம், மனநிம்மதி, மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.

வடமேற்கு : வடமேற்கு பகுதியில் சமையலறை அமைக்கும்போது கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்வது மிகவும் அவசியமானது. புதிய நண்பர்களும் அவர்களால் தொழிலில் முன்னேற்றமும் அமையும். கட்டிட வடிவமைப்பில் தோஷம் எதுவும் இல்லாமல் இருந்தால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறலாம்.

வடகிழக்கு : இந்த பகுதியில் சமையலறை அமைக்கக்கூடாது. அப்படி அமைத்தால் வீட்டில் செலவுகள் அதிகரித்து வறுமை நிலை உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள், உடல்நல பாதிப்புகள், விபத்து, குடும்பத்தில் நிம்மதியின்மை ஏற்படும். ஆண்களை பயனற்று போகச் செய்யும். வீட்டில் உள்ள ஆண் வாரிசு பல பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். சில இடங்களில் அகால மரணமும் ஏற்படலாம். வீட்டு பெண்களுக்கு குழந்தையின்மை பிரச்சனை ஏற்படலாம். அப்படி வாய்ப்பு இருந்தாலும், ஆண் குழந்தைகள் பெறும் வாய்ப்பு அரிதாகும்.

தெற்கு : தெற்கு பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு அமைக்கும்போது வறுமையை வழிய வர வழைக்கும். மன உளைச்சல் பெருகும். நிம்மதி கெடும்.

தென்மேற்கு : தென்மேற்கில் சமையலறை அமைக்கக்கூடாது. ஏனென்றால் அந்த வீட்டின் ஆண், பெண் இருவரையும் அதுபோன்ற அமைப்புகள் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்கலாம். மருத்துவத்திற்கு கட்டுப்படாத உடல்நல சீர்கேடு, துஷ்ட சக்திகளால் பாதிப்பு, கடன், வழக்குகள், திருமண தாமதம் அல்லது மண வாழ்வில் தீராத துயரம் போன்ற விரும்பத்தகாத பலன்களையே தென்மேற்கு சமையலறை கொடுக்கும்.

மேற்கு : மேற்கு பகுதியில் சமையலறை வருவதை தவிர்க்கவும். இதனால் வீட்டில் உள்ளவர்களின் நிம்மதி பாதிக்கப்படும்.

வடக்கு : வீட்டின் வடக்கு பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். அப்படி அமைக்கும் பட்சத்தில் குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும்.

கிழக்கு : இந்த பகுதியில் சமையலறை அமைப்பதை தவிர்க்கவும். குடும்பத்தலைவியின் உடல் நலனும், மகிழ்வும், நிம்மதியும் கெடும்.

இதுபோன்று மேலும் சில விஷயங்களை கவனத்தில் கொண்டு நாம் நமது வீட்டை அமைக்கும்போது சிறப்பான வாழ்வு அமையும்.

வீட்டின் அழகை மட்டும் கூட்டினால் என்னென்ன விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்? – வாஸ்து விளக்கங்கள்..!!

இப்பொழுது வாஸ்து பற்றிய விழிப்புணர்வு அனைவருக்கும் வந்துவிட்டது. ஒரு வீடு கட்டும்போது வாஸ்துவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதைவிட அதிகமாக வீட்டின் அழகிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

அவ்வாறு வீட்டின் அழகை கூட்டும்போது அந்த இடத்தில் வாஸ்து பலம் குறைந்து விடுகிறது.

உதாரணமாக, வீட்டின் உள்ளே மாடிபடி தெற்கு அல்லது மேற்கு பகுதியில் தான் அமைக்க வேண்டும். ஆனால், அழகிற்காகவும், இடம் பெரியதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் வடகிழக்கு அல்லது வேறு ஏதேனும் மூலையில் படியை அமைத்துவிடுகின்றனர். இதனால்தான் பாதிப்பு வந்தது என்று இவர்களால் உணர கூட முடியவில்லை.

ஒரு வீட்டில் வடமேற்கு மூலையில் படி அமைந்துவிட்டால் அவர்களுக்கு பணம் சம்பந்தமான பிரச்சனைகள் வந்துவிடும். வம்பு, வழக்கு போன்றவையும் சேர்த்து கடன் சுமை அல்லது இவர்களுடைய பணம் வேறு ஒருவரிடம் தங்கி விடுவது போன்ற பிரச்சனைகள் உருவாகிவிடும்.

வீட்டின் தென்மேற்கு படுக்கையறையில் இருந்து பால்கனி அமைப்பது அல்லது போர்டிக்கோ அமைப்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது அங்கு பில்லர் அமைப்புடன் ஏற்படுத்தி விடுவார்கள். அதனால் அங்கு வயதுக்கு வந்த ஆணும், பெண்ணும் இருந்தால் அவர்களுக்கு திருமணத்தடை ஏற்படுதல், கணவன்-மனைவி என்றால் அவர்களுடைய உறவுகளில் விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

ஆகையால், வீட்டிற்கு அழகு தேவைதான். ஆனால் அதை எப்படி அமைத்துக்கொள்வது? என்று ஒரு நல்ல வாஸ்து நிபுணரை அணுகி சரி செய்து கொள்ளவும்.

கட்டிய வீட்டை கடனுக்காகவே விற்பது ஏன்?…. Vasthu வாஸ்து காரணமா?

இந்த சமூகத்தில் பணம் மட்டுமே ஒருவரது வாழ்க்கை தரத்தை அளவீடு செய்கிறது. ஒரு மனிதன் பணக்காரன் எனவும், கடன்காரன் எனவும் அதுவே தீர்மானிக்கிறது. கடன் வாங்கியும் கட்டப்படும் வீடுகள் உண்டு. அப்படி கட்டிய வீடு அவரை சமூகத்தில் அவரது நிலையை மேலும் உயர்த்துகிறது.

அப்படி கட்டிய வீட்டை கடனுக்காகவே ஒருவர் விற்கிறார் என்றால் கீழ்க்கண்ட வாஸ்து காரணங்கள் இருக்கலாம்.

வீட்டின் தென்மேற்கு பகுதி தவறான அமைப்பில் இருப்பது. உதாரணமாக, படுக்கையறை தென்மேற்கில் இல்லாமல் இருப்பது.

பூஜையறை, குளியலறை வடகிழக்கில் வருவது.

வீட்டிற்கு சுற்று சுவர் இல்லாமல் இருப்பது.

வீட்டின் நுழைவாயில் வடக்கில் நீச்சப்பகுதியில் அமைத்திருப்பது.

வீட்டில் தென்மேற்கு வாசல் மற்றும் மாடிபடி அமைப்புகள் வருவது.

வீட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி தென்மேற்கை விட உயரமான அமைப்பில் இருப்பது.

வீட்டின் வடமேற்கில் போர்வெல், கிணறு, நீர்தேக்கத்தொட்டி போன்றவை வருவது.

வீட்டின் கூரை உயரமான அமைப்பில் இருப்பது.

வீட்டின் செப்டிக் டேங்க் வடமேற்கில் இல்லாமல் மற்ற இடங்களில் வருவது.

தென்மேற்கு பகுதியில் தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் இருத்தல்.

எனவே, வீடு கட்டும் முன் வாஸ்து நிபுணரை அணுகி தக்க ஆலோசனை பெற்று நிறைவான ஒரு வீட்டை கட்டி நிம்மதியாக வாழ வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் தெரிந்து கொள்ள  Rahu Kalam today

அப்படி என்னதான் செய்துவிடும்? இந்த தெருக்குத்தும்… தெருப்பார்வையும்..!!

ஒருவர் இடம் வாங்க வேண்டும் என்று யோசிக்கும்போது முதலில் அவர் மனதில், நல்ல மனையை வாங்க வேண்டும். சுற்றிலும் பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் கடைகள் இருக்க வேண்டும். நல்ல வளர்ச்சி மிகுந்த இடமாக இருக்க வேண்டும் என தேடுவர்.

ஆனால், ஒரு வாஸ்து அறிமுகம் உள்ள ஒருவர்,… மனை சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் வேண்டும். மனையின் வடகிழக்கு பகுதி தாழ்வாகவும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் இருக்க வேண்டும். முக்கியமாக தெருக்குத்தல் ஏதும் இல்லாத இடமாக இருக்க வேண்டும் என நல்ல மனையை தேர்வு செய்வார்.

அதேபோல் லே-அவுட் விற்றவர் என்றால் மற்ற இடத்தை விட தெருக்குத்து இருக்கும் இடத்தை முதலில் விற்க பல சலுகைகளை வாரி வழங்குவார்கள்.

அப்படி என்ன செய்துவிடும் இந்த தெருக்குத்து?

பொதுவாக தெருக்குத்து என்பது திசையை பொறுத்து பலன்கள் வேறுபடும். சில திசைகள் வரும் தெருப்பார்வை அல்லது தெருக்குத்து மிகப்பெரிய அளவில் அவர்களை உச்சத்தில் அமர வைத்து அழகு பார்க்கும். மேலும், அவர் கனவிலும் எதிர்பார்க்காத பலன்களை கொடுக்கும். உதாரணமாக, ஒருவர் வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு தெருக்குத்து அமைப்பில் இருகக்கும்போது அவரது வாழ்க்கை வளமாகவும், பென்ஸ் காரில் போவது போல் மிகவும் சுகமாகவும் இருக்கும்.

அதேபோல் ஒருவருக்கு தவறான தெருக்குத்து அமைப்பு அல்லது தெருப்பார்வை அமைந்துவிட்டால் அவர் மிக சீரும், சிறப்புமாக இருந்தாலும் கனவிலும் நினைத்து பார்க்காத சங்கடங்களை சந்திக்க நேரிடும். உதாரணமாக, அவர் வடமேற்கு, வடக்கு தெருக்குத்தில் இருந்தால் பணம், கடன் போன்ற சுமைகள் அதிகமாகி அதிலிருந்து மீண்டு வந்தால் போதும் அடுத்த ஜென்மமே எடுக்க தேவையில்லை என்பது போன்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்திவிடும்.

நல்ல வாஸ்து நிபுணர் தங்களுக்கான ஒரு சிறந்த மனையையும், அதில் அதிசிறந்த ஒரு வீட்டையும் அமைக்க உதவுவார்.

தொடர்ந்து கட்ட முடியாமல் பாதியில் நிற்கும் வீடு… வாஸ்து காரணங்கள்.!! Vasthu Reasons

வாஸ்து என்பது பஞ்சபூதங்களை உள்ளடக்கியது. அந்த பஞ்சபூதங்களுக்கு எந்தவிதமான இடையூறுமின்றி சரியான முறையில் கட்டிடங்களையும், அறைகளையும் அமைப்பதே வாஸ்து.

வீடு கட்ட சிறந்த வரைபடம் பெற்றாலும், அந்த வீட்டை கட்டுபவர்கள், அவர்களின் மனநிலை, அவர்களின் சூழ்நிலைகள், எதை முதலில் செய்ய வேண்டும்? எதை கடைசியில் செய்ய வேண்டும்? என்ற பக்குவம் தெரிந்திருந்தால் மட்டுமே ஒரு சிறந்த கட்டிடத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் கட்டி முடிக்க முடியும்.

உதாரணமாக, வீடு கட்ட தொடங்கும் முன் கட்டுமான பொருட்களை சேமிக்க சிறிய அளவில் ஒரு அறையை நமது மனையிலோ அல்லது பக்கத்திலோ நாம் உருவாக்குவோம். இது அமையும் திசையும், நம் கட்டிட தேவைகளுக்காக ஒரு நிலத்தடி நீர்த்தொட்டி தேவைப்படும்போது அதற்காக செப்டிக் டேங்க்கை முதலில் கட்டுதல் போன்றவை வீடு பாதியில் நிற்பதற்கான சில காரணங்களாக கொள்ளலாம். பணம் இருக்கிறது என்பதால் எல்லோராலும், எல்லா நேரங்களிலும், எல்லா வேலைகளையும் செய்து முடிக்க முடியாது!

வீடு, கட்டிடம் பாதியிலே நிற்பது கீழ் கண்ட சில காரணங்களால் இருக்கலாம்.

வீடு கட்டும் மனை சதுரம், செவ்வகம் இல்லாமல் இருப்பது. தென்மேற்கு பகுதியில் கிணறு, ஆள்துளை கிணறு, நீரோடை போன்ற அமைப்புகள் இருப்பது.

தென்மேற்கு தாழ்வாக இருப்பது. தெருக்குத்து, தெருப்பார்வை போன்ற அமைப்புகள் தென்மேற்கு பகுதியில் வருவது. வடக்கு, கிழக்கு பகுதியில் மதில் சுவர் பொதுவாக இருப்பது. வடக்கு, கிழக்கு அதிக இடமில்லாமல் இருப்பது.

ஒரு நகரத்தின் அடையாளமே அந்த நகரில் அமைந்துள்ள உயர்ந்த கட்டிடங்களையே அடையாளமாக காண்பர். ஆனால், இதையெல்லாம் செய்து முடிக்க தலைசிறந்த பொறியாளர்கள் மட்டுமல்லாமல் முதலில் அச்சாணியாகத் திகழ்வது வாஸ்து நிபுணர் மட்டுமே.

Vasthu for Marriage- இந்த அமைப்புகளை தவிர்த்தால் வீட்டில் மங்கள இசை கேட்குமா?

திருமண தாமதம் அல்லது தடை ஏற்பட வாஸ்து காரணங்கள்…

திருமணம் ஆவதற்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் அவற்றுள் மிக முக்கிய பங்கை வீட்டின் கிழக்கு திசையும், வடக்கு திசையும் தீர்மானிக்கும் என்பதை அறிந்து, மேலும் சில அமைப்புகளை வாஸ்துப்படி அமைத்து கொள்வது நல்லது.

கீழ்க்கண்ட அமைப்புகள் ஒரு வீட்டில் இருக்கும்போது உங்கள் வீட்டிலும் மங்கள நிகழ்வு நடைபெற தாமதப்படலாம் :

வீட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதி மூடிய அமைப்புடன் இருத்தல்.

வீட்டின் நுழைவு வாயில் உச்ச பகுதியில் இல்லாமல் இருப்பது.

மேல்மாடிக்கு செல்லும் படி அமைப்பு வடகிழக்கில் அல்லது தவறாக இருத்தல்.

வடகிழக்கில் பூஜையறை அல்லது சமையலறை அமைப்புடன் இருத்தல்.

தெருக்குத்து, தெருப்பார்வை தவறான அமைப்பில் வருவது.

வீட்டிற்கு சுற்று சுவர் இல்லாமல் இருத்தல் அல்லது சரியான அமைப்பில் இல்லாமல் இருத்தல்.

கிணறு, போர், சம்ப் போன்றவை வீட்டின் தென்கிழக்கில் அல்லது வடமேற்கில் இருத்தல்.

தென்மேற்கு அறையை படுக்கையறையாக பயன்படுத்தாமல் வேறு பயன்பாட்டில் இருப்பது.

வடக்கு மற்றும் கிழக்கில் மரம், மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, கோவில் கோபுரம் போன்ற அமைப்புகள் வருதல்.

வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியில் வடக்கு, கிழக்கு பகுதியை விட அதிக காலி இடம் இருத்தல்.

மேலும், இதுபோல சில நுணுக்கமான விஷயங்களை கண்டு அதனை சரி செய்யும்போது உங்கள் வீட்டிலும் மங்கள இசை கேட்கும்.

வாஸ்துவும், ஆண்வாரிசும் – ஒரு வாஸ்து பார்வை..!!

ஒவ்வொரு குடும்பத்திலும் ஆண்வாரிசு வேண்டும் என்ற ஏக்கத்தை மட்டும் எத்தனை வளர்ச்சி இருந்தாலும் அதை இன்னும் தகர்த்த முடியவில்லை. ஒரு வீட்டில் ஆண்வாரிசு இல்லாததற்கும், வாஸ்துவிற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்பதை அறிவியல் பூர்வமாக பார்ப்போம்.

அண்டமும், பிண்டமும் பஞ்சபூதங்களால் ஆனவை என்பது போல் நாம் வசிக்கும் இல்லமும் பஞ்சபூதங்களால் ஆட்சி செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையை நீரும், தென்கிழக்கு மூலையை நெருப்பும், தென்மேற்கு மூலையை நிலமும், வடமேற்கு மூலையை காற்றும், பிரம்ம ஸ்தானத்தை ஆகாயமும் ஆட்சி செய்கின்றன.

நம்மை சுமக்கின்ற நிலமாகிய பூமித்தாய் தென்மேற்கு மூலையை ஆள்வதன் அடிப்படையிலேயே ஒரு பெண் சுமக்கின்ற வாரிசு ஆணா, பெண்ணா என்பதும் அந்தப் பெண்ணின் வீட்டின் தென்மேற்கு மூலையை பொறுத்தே அமையும்.

ஒரு வீட்டின் குடும்ப தலைவர், தலைவி இருவரும் தென்மேற்கு அறையில் உறங்க வேண்டும். தென்மேற்கு பகுதி மட்டுமே அவனுடைய சந்ததியை உருவாக்கும். அவனுக்கு பணம், புகழை கொடுக்கும். ஆகையால் தென்மேற்கு மூலையில் படிக்கட்டுகள், கழிவறை அல்லது சமையலறை என தவறான அமைப்பில் இருந்தால் அது தீய விளைவை கொடுக்கும்.

மேலும் மனையின் வடக்கு மற்றும் கிழக்கு சுற்றுச் சுவர்களில் கட்டிடங்கள் அமைத்து ஈசானிய மூலை மூடப்பட்டால் உரிமையாளரின் உடல்நலம் மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகும். வம்சவளர்ச்சி தடைபட்டு தீய விளைவுகளே ஏற்படும். மனையின் வடகிழக்கு மூலை குறைவுபட்டலோ, வீட்டு அமைப்பில் வடகிழக்கு குறைவுபட்டலோ ஆண்வாரிசு இல்லாமல் போகும்.

எனவே, ஆண்வாரிசு வேண்டும் என்று ஆலயம் சுற்றுவோர் அனைவரும் வீட்டின் தென்மேற்கு பகுதியை நன்றாக ஆய்ந்து கவனியுங்கள். அதில் தேவையானவற்றை வைத்தும், தேவையில்லாதவைகளை நீக்கியும் உங்கள் வீட்டின் தென்மேற்கு மூலையை வாஸ்து பலம் மிகச் செய்தால் உங்களின் வேண்டுதல்கள் நிறைவேற்றப்படும் இயற்கையின் அருளால்!

Vasthu for Rental House – நம் வீட்டை வாடகைக்கு விட்டாலும் நம்மை வாஸ்து விடாதா?…

எப்படி ஒரு மனிதனின் உடலில் பல பாகங்கள் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே இயங்க முடியுமோ, அதை போன்றுதான் ஒருவர் வசிக்கும் வீடும்.

வீடு மட்டும் இல்லாமல் அவர்களுக்கு சொந்தமான நிலங்கள், வாடகைக்கு விடப்பட்ட வீடு, வணிக நிறுவனங்கள் போன்றவையும் வாஸ்து குறைபாடு இருந்தால் அவர்களை பாதிக்கும்.

அப்படி இருக்கும்போது ஒருவர் வசிக்கும் வீடு நல்ல தெருக்குத்துடன் நல்ல வாஸ்து பலம் பொருந்தியதாக இருந்தாலும் அவருடைய மகனுக்கோ, மகளுக்கோ திருமணம், குழந்தை பாக்கியம், வேலை சரியாக அமையாமல் இருத்தல் அல்லது மனநிலை பாதிப்பு போன்றவை இருக்கும்.

உதாரணமாக, அவர் வாடகைக்கு விடப்பட்ட வீட்டின் தென்மேற்கில் கழிவறை அல்லது போர் போன்ற அமைப்புகள் இருந்தால் திருமண தாமதம், குடும்ப வாழ்க்கை மற்றும் வேலை பாதிப்பு போன்றவை இருக்கலாம்.

அதுபோல தென்கிழக்கு, வடமேற்கு பகுதி தவறான அமைப்பாக இருந்தால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுதல், குழந்தை பாக்கியம், மனைவியின் உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

எனவே, நாம் வசித்தால் தான் நமக்கு நமது வீட்டின் வாஸ்து தவறுகள் பாதிக்கும் என இல்லாமல், வாடகைக்கு விடப்பட்ட தவறான அமைப்புடன் உள்ள நமது வீட்டினை வாஸ்துபடி சரி செய்து நிறைவான வாழ்வை வாழ்வோம்.

சமையல் குறிப்புகளை பார்வையிட Tamil Madars Samayal

ஒரு வீட்டின் மழலை செல்வம்.. வாஸ்து என்ன சொல்கிறது?

ஒருவருக்கு குலம் செழிக்க குலதெய்வம் எப்படி முக்கியமோ அதுபோல, குலம் காக்க நிச்சயம் அந்த வீட்டில் ஒரு குழந்தை எனும் தெய்வம் வேண்டும்.

இவ்வுலகில் ஒருவர் எவ்வளவு பணம், பொருள், புகழ் என அனைத்தும் வீட்டில் இருந்தாலும் அந்த வீட்டில் குழந்தைச் செல்வம் இல்லையெனில் அதைவிட மிகப்பெரிய துன்பம், துயரம் வேறு ஏதுமில்லை. இதில் ஆண்களைவிட பெண்கள் சந்திக்கும் அவமானங்கள் மிக கொடியது.

ஒரு வீட்டிற்கு அனைத்து திசைகளும் மிக முக்கியம். அதில் தென்கிழக்கு மற்றும் வடமேற்கு பகுதி குழந்தை பிறப்பை உறுதி செய்யும் திசைகளாகும். வீட்டின் தென்கிழக்கு என்பது பெண்கள் தொடர்பான இடமாகும். ஆகையால், அங்கு சமையலறை அமைத்து நம் முன்னோர்கள் வாழ்ந்தனர். அதேபோன்று தென்மேற்கு திசையில்தான் கணவன், மனைவி உறங்கும் படுக்கையறை இடமாக இருக்க வேண்டும். இவை இரண்டு திசைகளும் குழந்தை பிறப்பை உறுதி செய்யும்.

ஒரு வீட்டில் குழந்தை இல்லை என்பதை விட குழந்தை பிறப்பு தாமதமாகுதல் என கொள்ளலாம். வாஸ்து தவறுகள் கீழ்க்கண்ட அமைப்பில் இருக்கலாம்.

வீட்டின் தென்கிழக்கு பகுதியில் கழிவறை அல்லது பள்ளம் போன்ற அமைப்புகள்.

தென்கிழக்கு நீண்டு அல்லது கட் போன்ற அமைப்புகள். வடகிழக்கு பகுதி மூடிய அல்லது உயர்ந்த அமைப்புகள்.

வடமேற்கு படிக்கட்டு அடியில் கழிவறை அமைப்பு. படுக்கை அறை வடமேற்கு இருந்து, அங்கு கணவன், மனைவி உறங்குவது.

தென்மேற்கு படுக்கையறையில் தென்கிழக்கு கழிவறை அல்லது தென்மேற்கில் பூஜையறை போன்ற அமைப்பு வருவது.

மேலும், இதுபோன்ற சில தவறுகள் இருப்பின் அதை சரி செய்து உங்கள் வீட்டில் மழலை செல்வம் விளையாட வாழ்த்துக்கள்.

வாஸ்துப்படி பணவரவை தரும் அமைப்பு..!!

பணம் பணம் எல்லாம், பண மயம். வாஸ்து அமைப்பில் நம் வீடு இருந்தால் மட்டுமே சாத்தியம்.

காலத்தின் ஓட்டத்தில் குடும்பத்தின் ஆரோக்கியத்தையும், ஆனந்தத்தையும் பற்றி கவலைப்படாமல் வேலை நிமிர்த்தமாக இன்று தீப்பெட்டி போல் அடுக்கப்பட்ட குடியிருப்புகளில் வசித்து வருகிறோம்.

முன்னோர்களின் வாழ்வியல் முறைப்படி இயற்கை வழங்கும் ஒளி ஆற்றலையும், காற்று ஆற்றலையும் நாம் வசிக்கும் வீட்டில் தகுந்த முறைப்படி உள்வாங்கும்போது அங்கு வாழ்பவர்களின் எண்ணமும், செயலும் தனித்துவம் அடைகிறது.

இயற்கையோடு இசைந்த வாஸ்து அமைப்பு உள்ள இல்லங்களே ஆரோக்கியமான, ஆனந்தமான, வளமான வாழ்வு தரும் என்பதற்கு 100 வயதுக்கு மேல் கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த, வாழ்ந்து காட்டிய நம் முன்னோர்களே சான்று.

பணத்தை தேடாத மனிதன் இன்று உலகில் உண்டா? அப்படி இல்லையென்றால் பணம் படைத்த அனைவரும் வாழ்க்கை முழுமை அடைந்ததாக எண்ணுகிறார்களா? தேடல் தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது.

உதாரணமாக, ஒரு வீட்டில் கிழக்கிலும், வடக்கிலும் அதிகமான காலியிடம் மற்றும் ஜன்னல்கள் இருந்தால் லட்சுமி கடாட்சம் ஏற்படுத்தும். மேலும் அதிர்ஷ்டத்தை கொடுத்துக்கொண்டே இருப்பாள். அவர்களின் மகிழ்ச்சி எல்லையற்றதாக இருக்கும். அதுவே ஒரு வீட்டில் தென்மேற்கு பகுதியில் ஏதேனும் தவறு இருந்தால் பணவரவுகள் அதிகப்படியாக பாதிக்கும். உதாரணமாக, வீட்டில் சமையலறை அல்லது கழிவறை தென்மேற்கில் இருந்தாலோ அல்லது தொழில் கூடங்களில் தவறான பார்வை அல்லது தெருக்குத்து இருக்கும் பட்சத்தில் பண முடக்கம், பணவிரயம் அதிகப்படியாக ஏற்படும்.

ஒருவேளை மற்றவர்களுக்கு கடனாக கொடுப்பதோ அல்லது ஜாமீன் கையெழுத்து போன்று ஏதேனும் இருந்தால் அதுவும் விரயமே. நிச்சயம் உங்கள் வீட்டில் வடக்கும், மேற்கும் சந்திக்கக்கூடிய வடமேற்கு மூலையில் மிகப்பெரிய தவறு இருக்கலாம். உதாரணமாக, வடமேற்கு கூரை பகுதி தாழ்வாக (Low Ceiling) இருப்பது.

வாழ்க்கையில் பணம் என்பது மிக இன்றியமையாதது. அதுவும் நம் உழைப்பின் மூலமாக வரும் பணம் நல்ல சுபச் செலவுகளுக்காக செலவு செய்ய வேண்டுமே தவிர, விரைய செலவாகவும், வீண் செலவாகவும் இருக்கக்கூடாது.